10578 தேடலின்ஊற்று: கவிதைகள்.

ஏ.ஜே.எஸ்.நஸ்ரீன். கொழும்பு 5: ஏ.ஜே.எஸ்.நஸ்ரீன், 91, டீ.எஸ்.பொன்சேக்கா வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை)

(12), 68 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

நஸ்ரீனின் அண்மைக்காலக் கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள இந்நூலில், நினைவகளில் என்தாய், உனக்காக, தேடலின் ஊற்று, கூடிழந்த பச்சைக் கிளி, என் காதல், பிரார்த்தனை, நிழலான உறவு, என் தந்தையுடன் சில நொடிகள், ஈழத்தில் இன்று, உனக்கு வலிக்கும், கல்லூரியில் நீ ஒரு கவிக்குயில், பிடிக்கவில்லை உன்னை, நம் நாட்டுப் பணிப்பெண்கள், விஞ்ஞானம்-காதல்-நான்-நீ, எனது ஊர்க் கல்விக்கூடம், பிரிய ஸ்னேகமே, விடுதியில் நான், கனவு, மரணம், என் கவிக்குழந்தை, மண்ணறையை நாடி என் உடல் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட இக்கவிஞரின் இருபத்தியொரு கவிதைகள்;  இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33959).

ஏனைய பதிவுகள்

10223 அரசியல் பொருளாதார விடயங்கள்.

செ.சந்திரசேகரம். யாழ்ப்பாணம்: அபி வெளியீட்டகம், 196/23 தலுவில் ஒழுங்கை, நவாலி வடக்கு, மானிப்பாய், 1வது பதிப்பு, ஜனவரி 2015. (யாழ்ப்பாணம்: யாழ். பதிப்பகம், நல்லூர்). x, 140 பக்கம், விலை: ரூபா 300., அளவு: