எஸ்.சிவதாஸ் (தொகுப்பாசிரியர்). வவுனியா: மனநல மருத்துவப் பிரிவு, மாவட்ட பொது வைத்தியசாலை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2010. (வத்தளை: பேஜ் அன்ட் இமேஜ், 202/2B, ரோயல் பேர்ள் கார்டன்ஸ்).
88 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 400., அளவு: 19.5×20 சமீ., ISBN: 978-955-52407-0-3
வன்னி உளசமூக இணையத்தின் அனுசரணையுடன் அதன் தலைவரான மன நலமருத்துவர் எஸ்.சிவதாஸ் அவர்கள் தொகுத்துள்ள இந்நூல் கவிதைகளும் ஓவியங்களும் தொகுப்பாசிரியரின் புகைப்படக் கருவிக்குள் சிக்கிக்கொண்ட ஒளிப்படங்களுமாக, வவுனியா பூந்தோட்ட முகாம் சிறுவர்களின் ஆக்கங்களுக்கு மெருகூட்டி வழங்கப்பட்டுள்ளது. போரில் ஈடுபடுத்தப்பட்ட 450க்கும் மேற்பட்ட சிறார்களைக்கொண்டது பூந்தோட்டம் முகாம். இதைவிட வவுனியா மாவட்டத்திலுள்ள 14 இராணுவ முகாம்களிலும் 10000க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு மனநலசேவையாற்றிய தனது அனுபவத்தின் வெளிப்பாடாக மலர்ந்த கவிதை வரிகளுடன் இந்நூலை வைத்திய கலாநிதி சிவதாஸ் வழங்கியிருக்கிறார்.