சோ.ராமேஸ்வரன். கொழும்பு 5: செல்வி ராமேஸ்வரன், E 2/4, அன்டர்சன் தொடர்மாடி, 1வது பதிப்பு, 2006. (மஹரகம: தரஞ்ஜீ பிரின்டர்ஸ், 506 ஹைலெவல் வீதி, நாவின்ன).
viii, 88 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 955-99222-2-X.
1983ஆம் ஆண்டின் பின்னர் ஈழத்துத் தமிழ்மக்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றமானது அவர்களது கலை, கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றிலும் பாரிய மாற்றத்தைக் கண்டுவிட்டதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். காலத்திற்கேற்றவகையில் மாற்றத்தைக் காணமுடியாது போனாலும் வசதிகளுக்கு ஏற்ப அவர்களது வாழ்க்கைமுறைகள் அனைத்துமே மாறிவிட்டன என்று கருதும் ஆசிரியர் பால்ய திருமணம், சா வரம், ஒரு விடியல் பொழுதில், ஒரு தூணும் ஆறேழு பலூன்களும், சூறாவளியின் முன்னே ஒரு தீபம், தவறுகள் திருத்தப்படலாம், பனந்தோட்டத்து மாம்பழம் ஆகிய தனது ஏழு சிறுகதைகளின் வழியாகவும் எமக்கு இதனைச் சொல்ல முனைகின்றார். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 111716).