கம்பர். சுன்னாகம்: நா.பொன்னையா, ஈழகேசரி வெளியீடு, 2வது பதிப்பு, 1941, 1வது பதிப்பு, 1939. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
x, 38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
நூலாசிரியர் வரலாறு, இராமாயணச் சுருக்கம், சடாயுகாண் படலச் சுருக்கம் என்பவற்றோடு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. சோழநாட்டின் திருவழுந்தூரில் கி.பி. 885ஆம் ஆண்டில் வாழ்ந்தவர் கம்பர். வைஷ்ணவரான இவர் வடமொழியிலே (சமஸ்கிருதத்தில்) ஸ்ரீ வால்மீகி முனிவர் செய்தருளிய இராமாயண பெருங்காப்பியத்தை தென் மொழியிலே (தமிழ்மொழியில்) மொழிபெயர்த்து வழங்கியவர். இராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, திருக்கை வழக்கம், சரஸ்வதி அந்தாதி முதலிய பல நூல்களை எழுதியிருப்பினும், கம்பராமாயணமே இவரது பெயரை இன்றளவில் தாங்கி நிற்கின்றது. ஒட்டக்கூத்தர், புகழேந்தி, ஒளவையார் முதலானோர் இவர் காலத்துப் புலவர்களாவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24935).