10804 அறபுத்தமிழ் எங்கள் அன்புத்தமிழ்.

எ.எம்.எ.அஸீஸ் (மூல நூலாசிரியர்), எஸ்.எச்.எம்.ஜெமீல், எம்.அலி அஸீஸ் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 6: கலாநிதி எ.எம்.எ.அஸீஸ் மன்றம், 47/2 A, பிரெட்ரிகா வீதி, இணை வெளியீடு, கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது விரிவாக்கிய பதிப்பு, ஒக்டோபர் 2012, 1வது பதிப்பு, 1973. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 70 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-356-3.

கலாநிதி எ.எம்.எ.அஸீஸ் (04.10.1911-24.11.1973)அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவு வெளியீடாக வெளியிடப்பட்டது. அறபுத்தமிழ் எங்கள் அன்புத் தமிழ் 1, அறபுத்தமிழ் எங்கள் அன்புத் தமிழ் 2, அறபுத்தமிழ் ஆலிம் புலவர், இன்றைய தேவைகள், மொழிபெயர்ப்புக் கலை, ஸ்வாஹிலி மொழியும் அறபுத் தமிழும் ஆகிய ஆறு கட்டுரைகளும் பின்னிணைப்பாக புகழ்ப்பாவணியும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தனது வாழ்வின் 13 வருடங்களை அரச சேவையிலும், 13 வருடங்களை கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் அதிபர் சேவையிலும், தொடர்ந்து 13 வருடங்களை பொதுச்சேவையிலும் இலக்கியப் பணியிலும் செலவிட்டவர் இவர். அரசியலில் சிலகாலம் ஈடுபட்டு மூதவை உறுப்பினராக (செனட்டர்) 1952-1963 காலகட்டத்தில் பணியாற்றியவர். கொழும்பு ஸாஹிரா கல்லூரி அதிபராகச் சேவை, இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியம் ஆரம்பம், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை நிறுவியமை, முஸ்லிம் கலாச்சார நிலையம் தொடங்கியமை, இக்பால் சங்கம் ஸ்தாபிதம் என்பவை மூலம் அவரது சேவைக்களம் விரிந்தது. கலாநிதி எ.எம்.எ.அஸீஸ் அவர்கள் 1934முதல் பெருந்தொகையான கட்டுரைகளை எழுதியிருந்த போதிலும் 1960ம் ஆண்டின் பின்னரே அவை நுலுருப்பெற ஆரம்பித்தன. இலங்கையில் இஸ்லாம் (1963), மொழிபெயர்ப்புக் கலை (1965), மிஸ்றின் வசியம் (1967), கிழக்காபிரிக்கக் காட்சிகள் (1967), தமிழ் யாத்திரை (1968), ஆபிரிக்க அனுபவங்கள் (1969) போன்ற நூல்கள் இவரது படைப்புலகில் சிலவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 52077).

ஏனைய பதிவுகள்

14878 வெற்றிக்கு வலிகள் தேவை: கவிதைகளும் கதைகளும்.

வள்ளியம்மை சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: தேசிய கலை இலக்கியப் பேரவை, 62, காங்கேசன்துறை வீதி, கொக்குவில் சந்தி, கொக்குவில், 1வது பதிப்பு, நவம்பர் 2019. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). xii, 119