10864 புவியியல்துறைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு.

ஸீ.எம்.ஏ.அமீன். கொழும்பு 6: ஏஷியன் ஏஜென்சீஸ், 33-1/11 காலி வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1992. (சென்னை 600028: Essell Publishing House, 7, Leith Castle South Street, Santhome).

183 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 18×12.5 சமீ., ISBN: 955-95179-7-X.

அறிமுகம், முஸ்லிம்களின் புவியியற் பங்களிப்புக்கு அடிப்படையாக அமைந்த ஆக்கங்கள், 9ம் 10ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த புவியியலறிஞர்களும் அவர்களது ஆக்கங்களும், 11ம் நூற்றாண்டு முதல் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம் வரை புவியியலின் வளர்ச்சி, புவியியற் சார்பான கணித வானவியற் பணிகள், முஸ்லிம் புவியியலாளர்களும் படவரைகலையும், அகிய ஆறு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முதலாம் இயலில் வரலாற்றுரீதியாக புவியியலின் வளர்ச்சிபற்றிச் சுருக்கமான ஒரு விளக்கமும் புவியியல்துறையில் முஸ்லிம்களை ஈடுபாடுகொள்ளச்செய்த காரணிகளும் அவர்களின் பங்களிப்பும் பற்றிய ஒரு சுருக்கமான தொகுப்புரை வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் இயலில் முஸ்லிம்கள் புவியியலில் ஈடுபடுவதற்குக் களம் அமைத்துக்கொடுத்த மூலாதார நூல்களையும் முஸ்லிம் புவியியலாளர்களிடையே அவை ஏற்படுத்திய தாக்கங்களையும் காணமுடிகின்றது. தொடர்ந்து வரும் இரு இயல்களும் ஆரம்பநிலையிலிருந்து ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலம் வரை முஸ்லிம்கள் புவியியல்துறைக்கு ஆற்றிய பணியை அதன் முன்னேற்றத்தை விரிவாக ஆராய்கின்றன. புவியியலாளர்களையும் அவர்களது ஆக்கங்களையும் பற்றிக் கூறும் இவ்வியல்களே நூலின் பிரதானமான பகுதிகளாக இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து வானியற் புவியியல் பற்றிய அத்தியாயம் இடம்பெறுகின்றது. புவியியலோடு தொடர்புடைய படவரைகலையையும் அத்துறைக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பணிகளையும் பற்றி ஆறாவது இயல் பேசுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39078).

ஏனைய பதிவுகள்

11087 சர்வஞானோத்தர ஆகம ஞானபாத வசனம்.

சிவதொண்டன் சபை. யாழ்ப்பாணம்: சிவதொண்டன் சபை, 434, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு 11: அஷ்டலட்சுமி பதிப்பகம், 320, செட்டியார் தெரு). vii, 90 பக்கம், விலை: ரூபா 50., அளவு: