10977 வவுனியம் 2015: வவுனியா பிரதேச மலர்.

இ.நித்தியானந்தன் (மலராசிரியர்). வவுனியா: பிரதேச செயலகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2015. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி).

218 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.

வவனியா பிரதேசம் பற்றிய பதிவினை மேற்கொள்ளும் வகையில் வவுனியா பிரதேச செயலகத்தின் கலை பண்பாட்டு வெளியீடாக இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. தொன்மைமிகு வட்டாரம் (பரமு பஷ்பரட்ணம்), வவுனியா (அருணா செல்லத்துரை), வன்னியின் சிறப்புக்கள் (ஞா.ஜெகநாதன்), 7க்கும் 67க்கும் இடையில் எனது பார்வையில் வவுனியா (உடுவை எஸ்.தில்லைநடராஜா), வவுனியாப் பிரதேசத்திலுள்ள கிராமப் பெயர்களுக்கான காரணங்கள் (க.ஐயம்பிளளை), பார்த்தீனிய கட்டுப்பாடு: விழலுக்கு இறைத்த நிராகிவிடுமா? (சாரதாஞ்சலி கர்ணன்), வன்னிப்பிரதேச குளத்து மீன்வளம் (அகளங்கன்), பிரதேச திட்டமிடல் நடைமுறைகளும் அதற்கான முன்னெடுப்புகளும் (கலைமகள் மணிவண்ணன்), வவுனியாவில் உள்ள நினைவுச் சிலைகள் (சி.நாகராசா), உள மற்றும் உளசமூகப் பிரச்சினைகளும் அவற்றுக்கான தலையீடுகளும்: பிரதேச செயலக மட்டத்திலான ஒரு பார்வை (இ.அம்பிகைபாலன்), வவுனியா நகரசபைப் பிரதேசம் (தமிழ்க்கவி), கிராம/மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களும் அவற்றின் வளர்ச்சிப் போக்கும் (கிராம அபிவிருத்திக் கிளை), நலிவுற்றோர் நலன் பேணலும் அபிவிருத்தி முன்னெடுப்புகளும் (நந்தினி நவரட்ணராஜா), பாலியல் துஷ்பிரயோகம்; ஒரு பகுப்பாய்வு (சி.சுபாசினி), விரைபவர் கவனத்தை ஈர்க்கும் இரப்பவர் (மைதிலி தயாபரன்), வவுனியா பிரதேச செயலாளர் பிரிவின் நிலம் மற்றும் நீர் வளங்களின் பரம்பலும் பயன்பாடும்: ஒரு புவியியல் நோக்கு (சி.சிவராஜா), 2014இல் சிறுவர் பெண்கள் அலகின் வேலைத்திட்டங்கள் தொடர்பான கண்ணோட்டம் (சிறுவர் பெண்கள் அலகு), விதாதா வள மத்திய நிலைய செயற்பாடுகள் (விதாதா), நிறங்களும் குறியீடுகளும் (ஜெ.வொல்வின்), மேலதிக மாவட்ட பதிவாளர் கிளையினால் ஆற்றப்படும் சேவைகள் (கி.லிசாந்தினி), ஆலயங்களும் சமூகப்பணிகளும்: ஒரு பார்வை (யோகலட்சுமி சோமசுந்தரம்), பேராசிரியர் பொ.பூலோகசிங்கம் அவர்களின் வரலாறு: தேடல்களுடன் கூடிய ஆய்வுப் படைப்புகள் (முருகேசு கௌரிகாந்தன்) ஆகிய கட்டுரைகளுடன் கவிதைகள், சிறுகதைகள் என்பனவும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்