9035 வித்தியாசமானவர்கள்.

வி.பி. (இயற்பெயர்: வின்சன்ற் பற்றிக்ஸ்). யாழ்ப்பாணம்: நான் வெளியீடு, 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: மணி ஓசை, 12, பற்றிக்ஸ் வீதி).

(4), 102 பக்கம், விலை: ரூபா 45., அளவு: 21.5×14 சமீ.

19ஆவது ‘நான்’ வெளியீடாக மலர்ந்துள்ள உளவியல் நூல். மகிழ் மனவியல், ஆளுமை வளர்ச்சி, உறவுச் செயல்களின் ஆய்வுமுறை, நான் வாழ விரும்புகின்றேன், மனநிலைச் சமத்துவம், நல்வினை மனநோக்கு, மரணிக்காத மனிதத்துவம், உந்தல், உந்தலும் உணர்வும், சிந்தனையும் மொழியும், திறமை மதிப்பீடும் நுண்ணறிவும், சமுதாயத்துவச் சமநிலை, நானாக நான் இல்லை, ஆளுமை சிறைப்படுத்தப்படுகின்றது, அழகினை இரசிக்கிறேன், என்னை நானே உருவாக்குகின்றேன், இதயத்தில் ஓர் இடம், பயணம் தொடர்கின்றது ஆகிய மனித மேம்பாட்டு நோக்கம் கருதிய 18 உளவியல் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  84116). 

ஏனைய பதிவுகள்

15711 ஞானம்: பரிசுச் சிறுகதைகள்60 (ஞானம் 250ஆவது இதழ்).

தி.ஞானசேகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்ச் 2021. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 428 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,