9055 இந்திய அளவையியலில் அனுமானம்: தருக்க சங்கிரக அடிப்படையில்.

க.கணேசராஜா. தஞ்சாவூர் 4: மகாவீர் பதிப்பகம், 70, மருத்துவக் கல்லூரி சாலை, மருத்துவக் கல்லூரி நடுவாயில்  எதிர்ப்புறம், 1வது பதிப்பு, ஜுலை 2011. (தஞ்சாவூர் 1: மாணிக்கம் பிரிண்டர்ஸ்).

vi, 228 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 300., அளவு: 20.5×13.5 சமீ., ISBN: 978-955-53673-0-1.

இந்திய தத்துவ வரலாற்றில் நியாயத் தத்துவத்தின் பங்களிப்பு என்பது அளவையியல் அல்லது அறிவாராய்ச்சியியலில் முக்கியமாக அமையும். நியாயத் தத்துவத்தினை முறையாகப் பயின்ற சிறப்புடைய நையாயிக்கரானஅன்னம் பட்டர் அவர்கள் எழுதிய தர்க்க சங்கிரகம் எனும் நூல் இந்திய தத்துவஅளவையியலைத் தமிழ்மொழியில் முழுமையாக வெளிப்படுத்திய நூலாகும். அநநூலில் கூறப்பெறும் அனுமானக் கோட்பாட்டைப்பற்றி ஆசிரியர் இந்நூலில் விரிவாக ஆராய்ந்துள்ளார். ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான க.கணேசராஜா முதுதத்துவமாணிப் பட்டத்தின் பொருட்டு மேற்கொண்ட ஆய்வு இதுவாகும். அறிமுகம், தருக்க சங்கிரகத்தின் முக்கியத்துவம், அனுமானத்தின் அறிவாராய்ச்சியியல் அம்சங்கள், தருக்க சங்கிரக அனுமானக் கோட்பாடு, பௌத்த அனுமானக் கோட்பாடு ஒப்பீட்டாய்வு, முடிவுரை ஆகிய இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 222043).

ஏனைய பதிவுகள்

Universo Slots

Content NetBet Iniciar sesión en el casino móvil: Máquinas Sobre Juegos Sobre Tragamonedas Tipo b, O bien Tragaperras De Suerte Recibimiento A Tragamonedas24 Tragamonedas Roma