9123 காற்றில் கலந்தவை.

கரவையூர்ச் செல்வம். யாழ்ப்பாணம்: அமலமரி தியாகிகள் சபை வெளியீடு, 1வது பதிப்பு, 1979. (யாழ்ப்பாணம்: வஸ்தியான் அச்சகம், 392 பிரதான வீதி).

xxiv, 238 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 18×12.5 சமீ.

இலங்கை வானொலியில் கத்தோலிக்க நிகழ்ச்சிப் பிரிவில்  ஆசிரியர் ஆற்றிய  54 உரைகளின் தொகுப்பு. யாழ். ஆயர் எமிலியானுஸ் ஆண்டகை அவர்களின் மறைவையொட்டி வானொலியில் 20.7.1972 அன்று ஒலிபரப்பப்பட்ட சிறப்புரை முதலாவதாக நினைவுகள் சாவதில்லை என்ற தலைப்பில் இடம்பெறுகின்றது. தொடர்ந்து, பொங்கலோ பொங்கல், அ.ம.தி.125, நத்தார் எமக்கொரு சவால், நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர், பொருளாதாரம் போதாது, இயுஜின் டி மசெனெட், அன்பு நாகரிகம், கடமையா கடவுளா, அன்பு, மீட்பு, உயிர்த்த இரவு, செபம், மன்னிப்பு, என இன்னோரன்ன தலைப்புகளில் இவ்வுரைகள் அமைந்துள்ளன. தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை அவர்கள் இந்நூலுக்கு வழங்கியஅணிந்துரையில் ‘ஒவ்வொரு பேச்சிலும் பொருள் பொதிந்து கிடக்கின்றது. உணர்ச்சி வீறிட்டுப் பாய்கின்றது. உண்மைகள் துலக்கப்படுகின்றன. குற்றங்கள் கடியப்படுகின்றன. உவமைகள் சொல்லப்படுகின்றன. இங்கே யான் காட்டியவை கரவையூர்ச் செல்வம் வழங்கியவை. என் உள்ளத்தைக் கவர்ந்தவை.’ என்று குறிப்பிட்டுள்ளார். அருட்திரு கரவையூர்ச் செல்வம் புதிய உலகம் என்ற பெயரில் சமூகத் தொடர்பு நிலையத்தால் வெளியிடப்பட்ட ஒரு சமூக இறையியல் சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  77254). 

ஏனைய பதிவுகள்

Sort of Ports

Posts Video slot On the Worst Odds A lot more Awesome Position Myths That have Everithing Ports! Choosing An educated Online slots games A real