9128 ஆசியத் திருச்சபை வரலாறு: பாகம் ஒன்று (கி.பி.40-1800 ஆண்டுகள் வரை சில பதிவுகள்).

ஜெ.இ.ஜெயசீலன். யாழ்ப்பாணம்: வளன் ஆச்சிரமம், 47, 6ஆம் குறுக்குத்தெரு, 1வது பதிப்பு, மாசி, 2007. (யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம், நாவலர் வீதி).

xiv, 214 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-50109-0-0.

கலாநிதி சுவாமி ஜெ.இ.ஜெயசீலன் அடிகளார் கலைமாணிப் பரீட்சைக்கு ஆசிய வரலாற்றை ஓர் அலகாக்கிப் பட்டம் பெற்றவர். யாழ்ப்பாணத் திருச்சபை வரலாறு (1997), ஆசியத் திருச்சபை வரலாறு (2007), இலத்தீன் அமெரிக்கத் திருச்சபை வரலாறு ஆகிய நூல்களின் ஆசிரியர் இவர்.  யாழ்ப்பாணம், வளன் ஆச்சிரம வெளியீடான  ‘தேவதாயின் குரல்’ சஞ்சிகையில் 1997ம் ஆண்டு முதல் வெளிவந்த வரலாற்றுத் தொடரே இங்கு நூலுருவாகியுள்ளது. பலஸ்தீனம்: ஆரம்பகாலத் திருச்சபை, அந்தியோக்கியாவின் திருச்சபைகள், பாலைவனத்துத் திருச்சபைகள், இந்திய, மத்திய ஆசிய, சீனத்திருச்சபைகள், ஐரோப்பியர்கால சீன இந்தியத் திருச்சபைகள், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் கால தமிழ்நாட்டில் திருச்சபைகள், மதுரை மிஷன்: தத்துவ போதகர்  றொபேட் தே நொபிலி, மதுரை மிஷன்: சுவாமி வீரமாமுனிவர், யப்பானிய ஆரம்பகால திருச்சபை வரலாறு, யப்பானிய அரசியல் நிலையும் கிறிஸ்துவமும், பிலிப்பைன்ஸ் திருச்சபை வரலாறு, சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசிய திருச்சபைகள் ஆகிய 12 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 180036).

ஏனைய பதிவுகள்

Wild Panda Regal Slot Gaming

Content Betting Possibilities and other Functions Eyes Of one’s Panda Position Maximum Wins Have & Gameplay Best Gambling enterprises Offering Habanero Video game: To your