9182 சைவ வினாவிடை: முதற் புத்தகம்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் (மூலம்), அ.பஞ்சாட்சரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சமய கலாசாரக் குழு, யாழ் மாவட்டக் கலாசாரப் பேரவை, 1வது பதிப்பு, 1986. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

x, 34 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 13.5×10.5 சமீ.

யாழ் மாவட்டக் கலாசாரப் பேரவையின் மூன்றாவது பிரசுரம். பதிப்பாசிரியர் அ.பஞ்சாட்சரம், உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையின் பிரதி அதிபராகப் பணியாற்றியவர். கேள்வி-பதில்களின் வடிவில் பாமரருக்கும் சைவ சமய தத்துவங்களை எளியமுறையில் பரப்புவதில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் சைவ-வினாவிடை அந்நாளில் வெற்றிகண்டிருந்தது. இன்றளவில் சைவசமயம் கற்போருக்கான விருப்பு நூலாக இது இருந்து வருகின்றது.

13A11 சைவ வினாவிடை: முதற் புத்தகம்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். யாழ்ப்பாணம்: சண்முகநாதன் புத்தகசாலை, 1வது பதிப்பு, 1953. (யாழ்ப்பாணம்: சண்முகநாதன் அச்சகம்).

58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 13×10.5 சமீ.

கேள்வி-பதில்களின் வடிவில் பாமரருக்கும் சைவ சமய தத்துவங்களை எளியமுறையில் பரப்புவதில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் சைவ-வினாவிடை அந்நாளில் வெற்றிகண்டிருந்தது. இன்றளவில் சைவசமயம் கற்போருக்கான விருப்பு நூலாக இது இருந்து வருகின்றது. தோத்திரத் திரட்டுடன் கூடியதாக இம்மீள்பதிப்பு பாடசாலை மாணவர்களின் உபபாட நூலாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2755. பின்னைய பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 9182).

ஏனைய பதிவுகள்

17194 கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு அறிக்கையும் பெண்களும்.

சரோஜா சிவச்சந்திரன். யாழ்ப்பாணம்: மகளிர் அபிவிருத்தி நிலையம், இல.07, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: தீபம் பிறின்டர்ஸ், இல. 717, காங்கேசன்துறை வீதி). iv, 66 பக்கம், விலை:

9779 கண்ணகையும் தன்னகையும்.

வெற்றிமகன் (இயற்பெயர்: வெற்றிவேல் விநாயகமூர்த்தி). மட்டக்களப்பு: முத்தமிழ்ப் பண்ணை, 2, வன்னியனார் தெரு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1993. (மட்டக்களப்பு: புனிதவளனார் கத்தோலிக்க அச்சகம்). (8), 64 பக்கம், தகடு, விலை: ரூபா 35.,

13280 அரும்பண்பாட்டு கோலங்கள் (நடைச்சித்திரம்).

சு.துரைசிங்கம். சுன்னாகம்: சுன்னாகம் கலை இலக்கியச் சங்கம், 118, ஸ்ரேசன் ஒழுங்கை, சுன்னாகம் கிழக்கு, 1வது பதிப்பு, ஆவணி 2017. (சுன்னாகம்: கிருஷ்ணா பிறின்ரேர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி). 104 பக்கம், புகைப்படங்கள், விலை: