9190 கதிர்காமத் திருமுருகன்: வரலாற்று ஆய்வு நூல்.

எஸ்.எஸ்.நாதன் (இயற்பெயர்: சோணாசலம்பிள்ளை சிவகாமிநாதன்). கல்முனை: சி.சிவகுருநாதன், நற்பிட்டிமுனை 01, 4வது பதிப்பு, ஜுலை 2012, 1வது பதிப்பு, நவம்பர் 1953, 3வது பதிப்பு, ஜுலை 1964. (கல்முனை: கோல்டன் அச்சகம்).

xv, 33 பக்கம், தகடுகள், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ.

பதுளை சமத்துவ சங்கத் தலைவர் வ.ஞானபண்டிதன் அவர்களால் சேகரிக்கப்பட்ட குறிப்புகளின் உதவியுடனும் தனது தனிப்பட்ட ஆய்வுமூலங்களைப் பயன்படுத்தியும் தொண்டன் பத்திரிகைஆசிரியர் எஸ்.எஸ்.நாதன் அவர்களால் எழுதப்பட்டு  தமிழாசான் கந்த முருகேசனாரின் மதிப்புரையுடன் 1953ஆம் ஆண்டில் வெளிவந்த வரலாற்று நூலின் மீள்பதிப்பு இதுவாகும். இந்நூலில் தமிழர் சிங்களவர் தொடர்பினை விஜயன், பாண்டியன் மகளை விவாகம் செய்த தொடர்பினை அடிப்படையாகக் கொண்டு நிறுவுகிறார். தமிழின் அடிப்படையிலேயே சிங்களம் தோன்றியதெனவும், கதிர்காம வழிபாட்டு முறைகளில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சமவுரிமை உண்டென்றும் வாதிடுகிறார். ஆலய நிர்வாகத்தில் சைவசமயிகளே உரித்துடையவர்களென ஆதாரம் காட்டும் ஆசிரியர் பால்குடிவாவா பள்ளியை பக்கீர் மடமென்றும், 135 வருடங்களுக்கு மேற்பட்ட அம்மடம் இந்திய பக்கீர் சாய்புகள் வந்து தங்கும் மடமென்றும் குறிப்பிடுகின்றார் மேலும் அதை கொழும்பு தாவூஸ் என்பவர் பதுளை நீதிமன்றில் வாதாடி முஸ்லிம்களுக்குரிய பள்ளியாகப் பெற்றாரென்றும் விளக்குகின்றார். மதுரகவி  எஸ்.எஸ்.நாதன் என்றும் அழைக்கப்பட்ட இந்நூலாசிரியர்  சிறந்ததொரு கவிஞருமாவார்.

ஏனைய பதிவுகள்

11658 மண்ணிற் புதைந்த வரலாறு (கவிதைகள்).

முல்லை வீரக்குட்டி. கிழக்கு மாகாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு, 2014. (அக்கரைப்பற்று: சிட்டி பொயின்ட் அச்சகம்). 100 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-4628-06-9. திருக்கோயில் பிரதேசத்தில்,