9980 அனலைத் தென்றல்:சிறப்பு வெளியீடு.

வெளியீட்டுக் குழு. பிரான்ஸ்: அனலைதீவு மக்கள் ஒன்றியம், பாரிஸ், 1வது பதிப்பு, ஜுன் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).

24 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

அனலைதீவு மக்கள் ஒன்றியத்தில் பாரிஸ் கிளை 22.06.2014 அன்று நடத்திய ஆண்டு விழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன், அனலைதீவு: ஒரு பார்வை என்ற தலைப்பில் அசலகேசரி எழுதிய விரிவான கட்டுரையும், திருமதி மகேஸ்வரன் சுசீலாதேவி, வி.ரி.இளங்கோவன், சிவசாந்தி நடராசா, அசலை, அனலை ஆறு இராசேந்திரம், சக்தி அ.பாலஐயா ஆகியோரின் அனலைதீவு சார்ந்த கவிதைகளும், அனலைதீவு தல புராணங்கள் பற்றிய ஆக்கங்களுக்கான சுட்டியொன்றும்,  1871-1981 காலகட்டத்துக்கான அனலைதீவின் குடித்தொகை கணிப்பு அட்டவணையொன்றும், தீவின் வரைபடமும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

13178 சுப்ரமண்யம்: நோர்வூட் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக சிறப்பு மலர்-2001.

மலர்க்குழு. நோர்வூட்: ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம், 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). 140 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: