எஸ்.எல்.எம்.மஹ்ரூப் (புனைபெயர்: உடுவை பரந்தாமன்). ஹந்தெஸ்ஸ: உடுநுவரை கலை வட்டம், 132 A, Daulagala, Dumpallanga, 1வது பதிப்பு, ஜுலை 2011. (கண்டி: கிரியேட்டிவ் பிரின்டர்ஸ் அன் டிசைனர்ஸ், இல.3ஏ, பைரவகந்தை வீதி).
vii, 228 பக்கம், விலை: ரூபா 390., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1779-14-6.
சமகால நிகழ்வுகளை உள்ளடக்கியதாக பொது அறிவுச் சுடரின் Current Affairs: நிகழ்கால நிகழ்தரவுகள் என்ற தலைப்பில் பல தொகுதிகளை ஏற்கெனவே வெளியிட்டுள்ள நூலாசிரியரின் மற்றொரு நூல் இது. 1999, 2002, 2003, 2005, 2007-2008ம் ஆண்டுகளுக்கான சமகால விடயங்கள், அவ்வக்காலத்து பொது அறிவுத் தகவல்களை உள்ளடக்கியதாக சுருக்கமாகவும் சுவையாகவும் வெளியிடப்பெற்று இருந்தது. அவ்வகையில் 2009-2011 காலகட்ட நிகழ்வுகளின் பதிவாக இந்நூல் வெளியிடப்படுகின்றது. இந்நூலில் 23 பிரிவுகளில் தகவல்கள் வகைப்படுத்தித்; தொகுக்கப்பட்டுள்ளன. உள்ளுர் நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள், பொருளாதாரம், சர்வதேச நிகழ்வுகள், மகாநாடுகள், தேர்தல்கள், விண்வெளித் தகவல்கள், விஞ்ஞான மருத்துவத் தகவல்கள், இயற்கை நிகழ்வுகள், கலை கலாச்சார நிகழ்வுகள், சர்வதேச விருதுகள், சர்வதேச நிறுவனங்கள், விளையாட்டுத்துறை, கல்வியியல் நிகழ்வுகள் புகழ்பெற்ற இடங்கள், தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் என இவரது பதிவுகள் பல்வேறு திசைகளிலும் செல்கின்றன. பொது அறிவை மக்களிடையே வளர்த்தல், சமகால நிகழ்வுகளை மக்களுடன் பகிர்ந்துகொள்ளல், ஓவியக் கலையை இலகுவாகக் கற்கும் முறையை மாணவர்கள் மத்தியில் வளர்த்தெடுத்தல் போன்ற விடயங்களில் ஈடுபாட்டுடன் செயற்படுபவர் எஸ்.எல்.எம்.மஹ்ரூப் (சின்ன லெப்பை முகமத் மஹ்ரூப்). கண்டி மாவட்டத்தின் எலதத்த மேற்கைச் சேர்ந்த இவர், தேசியக் கல்லூரி, கம்பளை சாஹிராக் கல்லூரிகளில் ஆரம்ப இடைநிலைக் கல்வியைக் கற்று, கலைமாணிப் பட்டத்தை கொழும்பு பல்கலைக்கழகத்திலும், கல்வி டிப்ளோமா பட்டத்தை தேசிய கல்வி நிறுவனத்திலும் பெற்றுக்கொண்டவர். பொது சாதாரண பரீட்சைக்கும் ஊழஅஅழn புநநெசயட வுநளவ உட்பட சகல போட்டிப் பரீட்சைகளுக்கும் ஏற்றவகையில் நிகழ்கால நிகழ்தரவுகளை உள்ளடக்கிய வழிகாட்டி நூலாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 222038).