மு.க.சு.சிவகுமாரன். ஜேர்மனி: வெற்றிமணி வெளியீடு, Brinker Hohe 13, 58507 Ludenscheid, 1வது பதிப்பு, 2012. (ஜேர்மனி: Seltmann GmbH)
96 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
ஜேர்மனியில் வெளிவந்துகொண்டிருக்கும் மாத இதழான வெற்றிமணியில் தொடர்ந்து இரண்டாம் பக்கத்தில் மாதங்கி என்ற பெயரில் ஆசிரியர் எழுதிவந்த அறிவியல் செய்திகளாகவும், ஈழத்துச் சாதனையாளர்களின் அறிமுகச் செய்திகளாகவும் அமைந்த தகவல் திரட்டினைத் தொகுத்து, அதிசய உலா என்ற பெயரில் 2007இல் நூலொன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பொன்னும் மணியும் இப்பொழுது வெளிவந்துள்ளது. இதிலும் அறிவியல் விஞ்ஞானத் தகவல்களுடன் வெற்றிமணி ஆரம்பித்த காலகட்டத்தில் அதனுடன் தொடர்புடைய காத்திரமான சில நிகழ்ச்சிகளின் புகைப்படத் தொகுப்பாகவும் இந்நூல் அமைகின்றது.