றமணன் (இயற்பெயர்: எஸ்.ஏ.ஞானேஸ்வரன்). கொழும்பு 6: Quick Tec Academy, 385 2/9 காலி வீதி, 2வது பதிப்பு, புரட்டாதி 2003, 1வது பதிப்பு, ஆவணி 2001. (கொழும்பு 6: Quick Tec Academy, 385 2/9 காலி வீதி).
vii, 186 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 25×18 சமீ.
யாழ்ப்பாணம், காரைநகர்- கோவளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானத்துறைப் பட்டதாரியான ஆசிரியரின் தமிழ்மொழி மூலமான கணினிநூல் வரிசையில் இந்நூல் மற்றுமொரு வரவாக அமைகின்றது. இந்நூலும் அவரது பிற நூல்களைப் போன்று எல்லாக் கட்டளைகளையும் அவை உள்ளவாறே ஆங்கிலத்தில் கொண்டுள்ளது. Ms-Excel XP, Formatting Tool Bar, File, Edit, View, Insert, Exercise, Links, page setup, Print, Format, data, Validation, Group and Outline, Form, Filter, Pivot Table, Chart, Tools, Function, Macro, Windows ஆகிய 22 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலான கணனிச் சொற்களும் ஆங்கிலமொழியிலேயே தரப்பட்டுள்ளன. புத்தகத்தை வாசித்து நேரடியாகவே கணனியில் பயன்படுத்த இம்முறை உதவுகின்றது.