குரும்பசிட்டி இரா. கனகரத்தினம். திருச்சி 620021: உலகத் தமிழர் ஆராய்ச்சி மையம், 12/1, பாலமுருகன் தெரு, அய்யப்ப நகர், கே.கே.நகர், 1வது பதிப்பு, ஜுலை 2012. (திருச்சி 620 021: ஸ்ரீ திருமலை ஆப்செட் பிரிண்டர்ஸ், 3, சந்தோஷ் காம்ப்ளக்ஸ், சுந்தர் நகர்).
38 பக்கம், வண்ணத் தகடுகள், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 50.00, அளவு: 24×18 சமீ.
ஆவணஞானி குரும்பசிட்டி இரா கனகரத்தினம் அவர்கள் ஈழத்தமிழர் தொடர்பான பத்திரிகை நறுக்குகளையும், சிறு நூல்களையும் புகைப்படங்களையும் மற்றும் காகித ஆவணங்களையும் சேகரித்துப் பாதுகாத்து அவ்வப்போது காட்சிப்படுத்தி வருபவர். 1956 முதல் தனது வாழ்நாள் தேடல் பணியைத் தொடங்கிய இவர் இன்றுவரை அதனை நிறுத்தவில்லை. தனது சேகரிப்புகளை மைக்ரோபில்ம் நுண்படச் சுருள்களில் பதிவுசெய்து உலகளாவிய ரீதியில் நூலகங்களுக்கு வழங்கிவருபவர். 1889இலிருந்து விரிந்துசெல்லும் இவரது இடையறாத இத்தனிமனித முயற்சியின்பாற்பட்ட ஆவணப்படுத்தல் வேலைத்திட்டத்திற்கு நிதிவசதியைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகத் தனது பணிகளை புகைப்பட மற்றும் எழுத்தாவண உதவியோடு இந்நூலில் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். ஒரு தேடலின் வாழ்க்கைப்பதிவு இதுவாகும்.