8032 ஞானம் 150ஆவது இதழ்: ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ்.

தி.ஞானசேகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, நவம்பர் 2012. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).

600 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 1500., அளவு: 25.5×18 சமீ., ISBN: 978-955-8354-47-6.

06.06.2000 அன்று தனது முதலாவது இதழை வெளியிட்டுவைத்த ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையின் 150ஆவது இதழ் ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழாக 600 பக்கங்களில் வெளிவந்துள்ளது. தாயகத்திலும் புகலிடத்திலும் வாழும் படைப்பாளிகளை எவ்வித வேறுபாடுகளுமின்றி அரவணைத்துப் பயணிக்கும் இச்சஞ்சிகையின் 150ஆவது இதழில், ஈழத்தின் போர்க்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும். பதிவுசெய்யும் கருத்தாடல்கள், நேர்காணல்கள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என்பன இடம்பெற்றுள்ளன. சிவா கௌதமனின் ஓவியங்கள் படைப்புக்களை அலங்கரிக்கின்றன. இந்நூலின் இறுதியில் என்.செல்வராஜா எழதிய  ஈழத்தமிழரின் போர்க்காலப் பிரசுரங்களும் போராட்ட இலக்கியங்களும் என்ற சிறப்புக் கட்டுரை (பக்.553-600) இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

You bet Your life By Evelyn Cullet

Articles Tour of britain 2024 standings | You can Wager Your lifetime Which are the Recommendations To ensure An extended Lifetime of Aquatic Varnish? Web