8034 நித்திலம்: 2012.

எஸ்.சிவநிர்த்தானந்தா (பதிப்பாசிரியர்). திருக்கோணமலை: CSDI பிரிவு, வலயக் கல்வி அலுவலகம், 1வது பதிப்பு, 2012. (திருக்கோணமலை: சண் பிரிண்டர்ஸ், 244 மத்திய வீதி).

xvi, 236 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.

திருக்கோணமலை வலயக்கல்வி அலுவலகத்தின் ஆக்கத்திறன் ஆவணப்படுத்துதல் தகவற் பிரிவு (CSDI – Creative Skill Documentation and Information Unit) என்னும் அலகின் முன்னெடுப்பில் 2009ஆம் ஆண்டு முதல் வெளியிடப்படும் கல்வித்துறை ஆண்டு மலரின் நான்காவது வெளியீடு இதுவாகும். அப்பிரதேசத்தின் மாணவர்கள், ஆசிரியர் மற்றும் கல்வியியலாளர்களின்  பல்துறை ஆய்வுகள், ஆக்கங்கள் என்பன  91 கட்டுரைகளின் வாயிலாக இதில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சிங்கள மொழிமூலம் எழுதப்பட்ட 12 கட்டுரைகளும் இவற்றில் அடங்கியுள்ளன.

ஏனைய பதிவுகள்

12099 – இலண்டன் சைவ மாநாடு (பத்தொன்பதாவது) சிறப்புமலர்.

மலர் வெளியீட்டுக் குழு. இலண்டன் N 6 5BA: பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம், 200A, Archway Road, London, 1வது பதிப்பு, மே 2018. (இலண்டன்: ஜே.ஆர். பிரின்ட்). 156 பக்கம், புகைப்படங்கள்,