வி.மைக்கல் கொலின் (ஆசிரியர்). மட்டக்களப்பு: மகுடம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, 2013. (மட்டக்களப்பு: வனசிங்கா அச்சகம்).
80 பக்கம், புகைப்படங்கள், ஓவியங்கள், விலை: ரூபா 100., அளவு: 27.5×20.5 சமீ., ISSN: 2279-1906.
மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் மகுடம் காலாண்டிதழின் ஐந்தாவது இதழ் (ஜனவரி-மார்ச் 2013), தமிழறிஞர் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு நினைவையொட்டிச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. ஈழம் கண்ட தனிப்பெரும் தமிழ்த்தூதர் (சி.ரமேஷ்), தமிழறிவும் தமிழுணர்வும் ஊட்டிய ஹட்டன் தமிழ் விழாவில் தந்தை தனிநாயகம் அடிகள் (சாரல்நாடன்), தமிழில் அச்சேறிய முதல் நூல்களும்அவற்றைக் கண்டுபிடித்த தனிநாயகம் அடிகளாரின் பெரும் முயற்சியும் (தமிழ்நேசன் அடிகளார்), நான் பழகிய தனிநாயகம் அடிகளார்) வண. யோசப் மேரி அடிகள்), தமிழை உலகமயப்படுத்திய தனிநாயகம் அடிகள் (சந்திரசேகரன் சசிதரன்) ஆகிய கட்டுரைகள் இச்சிறப்பிதழின் வழமையான அம்சங்களுடன் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.