வி.மைக்கல் கொலின் (ஆசிரியர்). மட்டக்களப்பு: மகுடம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, 2012. (மட்டக்களப்பு: வனசிங்கா அச்சகம்).
80 பக்கம், புகைப்படங்கள், ஓவியங்கள், விலை: ரூபா 100., அளவு: 27.5×20.5 சமீ., ISSN: 2279-1906.
மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் மகுடம் காலாண்டிதழின் நான்காவது இதழ் ஒக்டோபர்-டிசம்பர் 2012), மலையகச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. வழமையான கலை இலக்கிய அம்சங்களுடன், மலையகம் சார்ந்த சிறுகதைகளையும் (சிவனு மனோகரன், யுகாநந்தினி, சுதர்ம மகாராஜன்), சிங்கள மொழிபெயர்ப்புக் கவிதை (சிங்கள மூலம் சஜுவனி கஸ்தூரி ஆராச்சி, தமிழாக்கம்-எம்.ரிஷான் ஷெரிப்), நூல் மதிப்புரைகள் (மலையகமும் இசை பிழியப்பட்ட வீணையும்-பஹீமா ஜகான், நிசங்களின் சத்தம்-லெனின் மதிவானம், பீலிக்கரை-பாக்குப்பட்டை-தவச்செல்வன்), ஆகியவற்றுடன் மலையகம் சார்ந்த கட்டுரைகளையும் (மலையக அரசியல் கலாச்சாரம்-பூச்சியத்தார், மலையக சமூக வளர்ச்சியில் கல்வியின் தாக்கம்-வெள்ளையன் கணேசலிங்கன், வண்ணச்சிறகு அரு சிநாநந்தன்- மல்லியப்பு சந்தி திலகர், தேசபக்தன் நடேசையர்- அந்தன ஜீவா) இச்சிறப்பு மலர் உள்ளடக்கியது.