8043 சமூக வானொலி: மனித வலுவாக்கத்திற்கான ஊடகம்.

எம்.சீ. ரஸ்மின். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park,  1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம், U.G.50, People’s Park,).

xviii, 190 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-685-001-7.

எம்.சீ. ரஸ்மின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விஷேட துறையில் பட்டம் பெற்றவர். முதுமானிக் கற்கையை அபிவிருத்திக்கான தொடர்பாடல் துறையில் பூர்த்திசெய்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதிநேர ஒலிபரப்பாளராகப் பணியாற்றுகிறார்.  சமூக வானொலி Community Broadcasting தொடர்பாக இவர் எழுதிய இந்நூல், சமூக வானொலியின் பணிகளும் செயற்பாடுகளும், சமூக வானொலியின் பண்புக்கூறுகள், சமூக வானொலி ஏன் தேவை? அபிவிருத்தி, தொடர்பாடல், பங்கேற்றல் மற்றும் மகாவெலி சமூக வானொலி, இலங்கையில் சமகால சமூக வானொலிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இலங்கையில் இணையத்தள சமூக வானொலிகளின் நன்மைகளை மக்கள்மயப்படுத்துதல்-சவால்களும் வாய்ப்புகளும், ஆணாதிக்க கட்டமைப்புகளும் பெண் விருத்தியும்- சமூக வானொலியை மையமாகக் கொண்ட நோக்கு, சமூக ஒலிபரப்புக்கு கிளை மொழி வழக்கினைப் பயன்படுத்துதல்- ஒரு நோக்கு, அபிவிருத்திக்கான தொடர்பாடலும் சமூக வானொலியும், இலங்கையில் சமூக வானொலிகள்-சிறு அறிமுகம், மக்கள் சேவை ஒலிபரப்பும் பன்முகத் தொடர்பாடலும்- ஓர் அறிமுகம் ஆகிய 11 தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது.

ஏனைய பதிவுகள்

Gioco Plinko Casinò Online Italiani

Содержимое Cosa è il gioco Plinko? Origini e popolarità del Plinko Come giocare a Plinko online Vantaggi del gioco Plinko Strategie per aumentare le probabilità