பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்).
152 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955- 0469-15-4.
பருத்தியூர் பாலவயிரவநாதனின் கருத்து வினைப்பாடுகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக வாழ்வியல் வசந்தங்கள் என்ற நூல்வரிசையில் உள்ள 18 நூல்களும் அமைகின்றன. தினக்குரல் பத்திரிகையில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகள், பாரம்பரியப் பண்பாட்டுத்தளத்தில் நின்று சமகாலத்து வாழ்க்கைக்குரிய எடுத்துரைப்புகளாக அமைகின்றன. இத்தொகுதியில் பயணங்கள், புன்னகை, உழைத்தல், வசீகரம், கருத்துக்கள், உன்னை நீ முந்து, விளம்பரங்கள், கரிசனை, அற்புதம், அன்பான தம்பதியினரைப் புறத்தாக்கங்கள் பற்றுவதில்லை, ஆராயாது நடந்தேறும் திருமணங்கள் பாதிப்புக்கள், எல்லோரிடமும் ஆலோசனை கேட்க வேண்டாம், நல்ல கணவனின் தெரிவக்கு அவசியமானவை, மாறிடும் மனதை மாற்றிச் சீராக்குக, உறவுகளை உதறக் கூடாது, இல்லங்கள் ஆலயங்களாக வேண்டும்ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 16 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பாலகிருஷ்ணன் வயிரவநாதன் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் தன் கல்வியைப்பெற்றவர். இந்து சமய கலாசாரப் பணிமனையில் நிர்வாக அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.