நா.ஞானகுமாரன். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, யுஜீ 50, பீப்பிள்ஸ் பார்க், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை).
xii, 232 பக்கம், விலை: ரூபா 460., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-685-014-7.
பேராசிரியர் நாகநாதன் ஞானகுமாரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் 34 வருடங்களாகக் கடமையாற்றுபவர். பன்னூலாசிரியரான இவர் மெய்யியல், சைவ சித்தாந்தம், வேதாந்தம் ஆகிய துறைகளில் ஆழமான ஈடுபாடும் ஆராய்ச்சிக் கண்ணோட்டமும் மிக்கவர். இந்திய மெய்யியலுக்கு ஓர் அறிமுகம், வேதாந்தத்திற்கு ஓர் அறிமுகம், சங்கரர் காட்டும் பிரம்மம், சங்கரர் காட்டும் ஆத்மன், சங்கரர் காட்டும் உலகு, சங்கரர் சுட்டும் மாயை, சங்கர வேதாந்த விமர்சனமும் மறுப்பும், சங்கரரும் அத்வைதமும், அறிவாராய்ச்சியியல், ஒழுக்கவியல், மோட்சம் ஆகிய பதினொரு இயல்களில் இந்நூல் எழுதப்பெற்று வெளிவந்துள்ளது.