8054 அம்மா: வாழ்வியல் வசந்தங்கள் 12.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்).

xxii, 162 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×13 சமீ., ISBN: 978-955- 0469-03-1.

பருத்தியூர் பாலவயிரவநாதனின் கருத்து வினைப்பாடுகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக வாழ்வியல் வசந்தங்கள் என்ற நூல்வரிசையில் உள்ள 18 நூல்களும் அமைகின்றன. இளமை, அம்மா, சுயசிந்தனை, சிக்கனம் ஒரு வருமானம், எல்லோரும் நம்மவரே, மனம் முறிந்தால், மணமுறிவா?, புறம் கூறுதல், அறம் ஒறுத்தலாகும், காலம் தவறாத பணிகள், சந்தேகம், தட்டிக்கேட்டல்,  திறந்த இதயம்-நிறைந்த வாழ்வு, கடன், முக்காலங்கள், பொறுமை-நிதானம், வாக்குக் கொடுத்தல், எதிர்மறை எண்ணங்கள். சொர்க்கம் எங்கே? பலத்தினை வழங்குதல், எல்லை மீறாத உரிமைகள், இங்கிதத்தைச் சொந்தமாக்குங்கள், சட்டம் கட்டுப்பாடான சமூக கோட்டையைச் சமைக்கும்ஆகிய 21 கட்டுரைகள் இத்தொகுப்பில் அடங்குகின்றன. தினக்குரல் பத்திரிகையில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகள், பாரம்பரியப் பண்பாட்டுத் தளத்தில் நின்று சமகாலத்து வாழ்க்கைக்குரிய எடுத்துரைப்புகளாக அமைகின்றன. இந்நூலில் நீதி நூல்களையொத்த ஓரிரு வரிகளில் அமைந்த போதனைகளும் சிந்தனையில் உதித்த கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன. பாலகிருஷ்ணன் வயிரவநாதன் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் தன் கல்வியைப்பெற்றவர். இந்து சமய கலாசாரப் பணிமனையில் நிர்வாக அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

ஏனைய பதிவுகள்