8061 காதலும் கடமையும்: வாழ்வியல் வசந்தங்கள் 12.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்).

154 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×13 சமீ., ISBN: 978-955- 0469-13-0.

பருத்தியூர் பாலவயிரவநாதனின் கருத்து வினைப்பாடுகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக வாழ்வியல் வசந்தங்கள் என்ற நூல்வரிசையில் உள்ள 18 நூல்களும் அமைகின்றன. பரிபூரணத்துவம், காதலும் கடமையும், தர்மம், நிம்மதி, பசி, தூற்றுதல் ஏற்புடையதன்று, துன்பங்கள் சொந்தங்கள் அல்ல இன்பங்களே நிரந்தரமாகட்டும், பெண், வேடதாரிகள், சோதனை, எப்படியும் வாழ்ந்து விடலாமா?, வயதுவந்த பிள்ளைகளுடன் சினேகபூர்வமாகப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளுங்கள், இல்வாழ்வில் இனிமை பொங்க ஆகிய 13 கட்டுரைகள் இத்தொகுப்பில் அடங்குகின்றன. தினக்குரல் பத்திரிகையில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகள், பாரம்பரியப் பண்பாட்டுத் தளத்தில் நின்று சமகாலத்து வாழ்க்கைக்குரிய எடுத்துரைப்புகளாக அமைகின்றன. இந்நூலில் நீதி நூல்களையொத்த ஓரிரு வரிகளில் அமைந்த போதனைகளும் சிந்தனையில் உதித்த கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன. பாலகிருஷ்ணன் வயிரவநாதன் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் தன் கல்வியைப்பெற்றவர். இந்து சமய கலாசாரப் பணிமனையில் நிர்வாக அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

ஏனைய பதிவுகள்

A real income Slots

Blogs Silver Gold coins, Rolls Of money And Silver Bars Totally free Mobile Slots Gambling establishment Guru This is a classic casino slot games who’s

13378 இயற்கை: சுற்றாடல் மஞ்சரி: மலர் 1, இதழ் 2: ஜனவரி 1993.

சுனில் சரத் பெரேரா (பிரதம ஆசிரியர்), H.M.R.P.ஹேரத் (துணைஆசிரியர்), தி.அமிர்தலிங்கம் (இணைப்பலுவலர்). கொழும்பு 4: சுற்றாடல் பாராளுமன்ற விவகார அமைச்சு, யுனிட்டி பிளாசா கட்டிடம், 1வது பதிப்பு, ஜனவரி 1993.(கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).