8067 சுயதரிசனம்: வாழ்வியல் வசந்தங்கள் பாகம் 03.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்).

146 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955- 0469-04-8.

பருத்தியூர் பாலவயிரவநாதனின் கருத்து வினைப்பாடுகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக வாழ்வியல் வசந்தங்கள் என்ற நூல்வரிசையில் உள்ள 18 நூல்களும் அமைகின்றன. பாரம்பரியப் பண்பாட்டுத்தளத்தில் நின்று சமகாலத்து வாழ்க்கைக்குரிய எடுத்துரைப்புகளாக இக்கட்டுரைகள் அமைகின்றன. இத்தொகுதியில் அந்தரங்கங்களும் சுதந்திர உணர்வுகளும், விருப்பங்களும் அவற்றின் விளைவுகளும், விரக்தியை விரட்டு, கனவுகள் அதன் பாதிப்புக்கள், கண்ணீர், விழிப்புடன் களிப்போடு உழை,  சுயதரிசனம், அன்புநிலையும் துறவுநிலையும், நல்ல பொழுதுபோக்கு வாழ்க்கைக்கு உவப்பு, இல்லங்கள் ஆலயங்களாக வேண்டும், வேற்றுமை உணர்வு, எச்சரிக்கை உணர்வு, தன்னை ஆட்சிப்படுத்தல், பொய்மையாளர்கள், இன்சொல் பேசினால் இல்லம் சிறக்கும், அனுபவங்கள் தரும் அர்த்தங்களைப் புரிந்துகொள்க ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 16 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பாலகிருஷ்ணன் வயிரவநாதன் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் தன் கல்வியைப்பெற்றவர். இந்து சமய கலாசாரப் பணிமனையில் நிர்வாக அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

ஏனைய பதிவுகள்

OPI Race For Pinks Nail enamel 15ml

For example repairs, improvements, and you can alterations, that may total up to thousands of cash. Although not, you will need to observe that racing