த.துரைசிங்கம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: உமா பதிப்பகம், 23, 3/3 அறத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
vi, 96 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ.
ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளரான நூலாசிரியர் சிறுவர் நூல்களையும், பாடநூல்களையும் ஏராளமாக வெளியிட்டவர். அமுத மொழிகள், சான்றோரின் பொன்மொழிகள், வெற்றிகரமான வாழ்வுக்கு வழிகாட்டும் செய்திகள், குமரகுருபரர் பொன்மொழிகள், திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் பொன்மொழிகள், உங்கள் சிந்தனைக்கு, அறியவேண்டிய அரிய தகவல்கள், தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களின் நற்சிந்தனைகள், கீதை காட்டும் பாதை ஆகிய ஒன்பது தலைப்புகளில் பல்வேறு அறக்கருத்துகளைத் தொகுத்துத் தந்துள்ளார்.