8103 சந்தனாசாரியர் சரிதையும் சைவ சித்தாந்த சாத்திரங்களும்.

மா.வேதநாதன். சுன்னாகம்: சைவ சித்தாந்த ஆய்வு நிறுவனம், ஏழாலை மேற்கு, 1வது பதிப்பு, 2008. (சங்கானை: சாய்ராம் பிரிண்டர்ஸ்).

vi, 111 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு: 20.5×14.5 சமீ.

சந்தனாசாரியர் தமிழகத்தில் தமிழ்மொழியில் வழங்கிய சைவமே சைவசித்தாந்தம் என்றும் சித்தாந்த சைவம் என்றும் தத்துவச் சைவமென்றும் வழங்கப்பெறுகின்றது. சந்தனாசாரியர் நிலைநிறுத்திய சைவசித்தாந்த மெய்யியலுக்கு சிவாகமங்களும் சைவத்திருமுறைகளும் பிரதான பிரமாணப் பனுவல்களாக விளங்குகின்றன. இந்நூலில் மெய்கண்டதேவர், அருணந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாசாரியார் ஆகிய நான்கு சந்தனாசாரியர்கள் பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளது. மேலும் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகிய 14 சித்தாந்த சாத்திரங்கள் தோன்றிய தத்துவப் பின்னணியும் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. 2005இல் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட நிறுவனமான சைவ சித்தாந்த ஆய்வு நிறுவனத்தின் முதலாவது வெளியீடு இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  229598).

ஏனைய பதிவுகள்

16292 ஈழத்துத் தமிழ் வழக்கு அகராதி (தமிழ்-தமிழ்ஆங்கிலம்).

ஆ.சதாசிவம் (மூலம்), நவரட்ணம் குகபரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: திருமதி திருஞானேஸ்வரி சதாசிவம், 11, சின்சப்பா வீதி, 1வது பதிப்பு, 2022. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை). xvi, 366

11405 தமிழ் ஏழாந்தரம்.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: தமிழ் மொழிக் குழு, பாடவிதான அபிவிருத்தி நிலையம், கல்வி வெளியீட்டுத்திணைக்களம், 1வது பதிப்பு, 1973. (கொழும்பு: இலங்கை அரசாங்க அழுத்தகர் திணைக்களம்). (6), 286 பக்கம், விலை: