டோயோஹிக்கோ ககாவா (மூலம்), மு.சு.இரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 13: மு.சு.இரத்தினம், 206 பிக்கரிங்ஸ் வீதி, கொட்டாஞ்சேனை, 2வது பதிப்பு, செப்டெம்பர் 1953, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1953. (கொழும்பு: விவேகா பதிப்பகம், 79, 1வது ஒழுங்கை, பள்ளிவாசல் தெரு).
42 பக்கம், விலை: சதம் 75., அளவு: 19×12.5 சமீ.
ஜப்பானிய மேதையான டோயோஹிக்கோ ககாவாவை தூரகிழக்குகாந்தி என்றும் அழைப்பார்கள். இத்தொகுப்பில் அவரது 12 கட்டுரைகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் மு.சு.இரத்தினம் அவர்கள். நான் ஒரு பேதை, சூதாடி, அன்பும் அறமும், இல்லாமை, நோயும் சோர்வும், துன்பம் ஒரு கலை, போர், சோதனையும் முரண்பாடும், அணிகலன், குடும்பத் தொல்லை, எல்லாம் சூழ்நிலையா, வாழ்வின் வளத்துக்கு விண்ணப்பம் ஆகிய தலைப்புகளில் இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 114861).