8114 கிறீஸ்தவ நாகரீகம்: சொற்களஞ்சியம்.

ஏ.ஜே.வீ.சந்திரகாந்தன். யாழ்ப்பாணம்: கிறிஸ்தவ மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 15: ரூபினா கிராப்பிக்ஸ், 48, டெலாசால் வீதி).

43 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-95767-3-9.

வேதாகம இயல், பொருள்கொள் இயல் (Bible and Hermeneutics), திருவழிபாட்டியல், திருச்சட்டவியல் (Liturgy and Canon law), திருப்பணியியல், திரு அறவியல் (Pastoral and Moral Theology), மெய்யியல், இறைஇயல் (Philosophy and Theology) ஆகிய நான்கு பெரும் பிரிவுகளின்கீழ் இச் சொற்களஞ்சியம் தொகுக்கப்பட்டுள்ளது. இங்கு தரப்பட்டுள்ள சொற்கள், பல இறையியல் நூல்கள், கிறிஸ்தவ சஞ்சிகைகள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டவையாகும். இத்துறையின் எதிர்கால வளர்ச்சியைக் கருதி இக்கலைச்சொற்களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சிவஞானசுந்தரம், பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகியோரால் பார்வையிடப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  115905).

ஏனைய பதிவுகள்

11528 சிவானந்த ரசனாவளீ:சம்ஸ்கிருத ஆக்க முயற்சிகள்.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்).  யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2016. (சுன்னாகம்: கஜாநந்த் பிரின்டர்ஸ், மானிப்பாய் வீதி, இணுவில்). 88 பக்கம், விலை: