8116 பாதை தெரியவில்லையே இறைவா.

அன்ரன் மத்தாயஸ். யாழ்ப்பாணம்: அருட்திரு அன்ரன் மத்தாயஸ், புனித ஆசீர்வாதப்பர் ஆலயம், கச்சேரி நல்லூர் வீதி, 1வது பதிப்பு, மே 2000. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).

vii, 110 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 21×13.5 சமீ., ISBN: 955-95495-2-9.

அருட்கலாநிதி அன்ரன் மத்தாயஸ் அவர்களின் முற்போக்கான சிந்தனைகளுக்கு இலக்கிய வடிவம் கொடுத்து நிற்கின்றது இந்நூல். தனித்துவம்மிக்க அவரது சிந்தனைகள் வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. எமது வாழ்வுக்குத் தேவையான திரு விவிலியம், கிறிஸ்து இயல், திருச்சபை இயல், சமூகத் தொடர்புச் சாதனங்கள் ஆகியவை பற்றிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. இரு பகுதிகளைக்கொண்ட இந்நூலில் பாதை தெரியவில்லையே  இறைவா, நற்செய்தி நூல்களின் தோற்றம்,  திரு விவிலியத்தில் இறையாட்சி,  இறை உறவில் மலரும் மதம், நீதிசார் செயற்பாட்டின் விவிலியப் பின்னணி,  உயிர்ப்பின் வழி திருச்சபை செல்கின்றதா? திருச்சபை எதிர்நோக்கும் அறைகூவல்கள், எம் வாழ்வே ஞானவாழ்வு, விடுதலையின்றி வாழ்வில்லை வளர்ச்சியில்லை பயிற்சியில்லை, கிறிஸ்துமஸ் தரும் செய்தி, சமூகத் தொடர்புக் கருவிகளும் நாடும்- கிறிஸ்தவக் கண்ணோட்டம் ஆகிய 11 கட்டுரைகள் பகுதி ஒன்றிலும், பிறருக்காக, அன்பும் நீதியும், கடவுளுக்குக் கண் இல்லையே, இது யார் குற்றம், கடவுள் இல்லை, கல்விக்குக் களங்கமா ஆகிய தலைப்பிலான குறுங் கட்டுரைகள் இரண்டாம் பகுதியிலும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  129668).

ஏனைய பதிவுகள்

14014 கொழும்புத் தமிழ்ச்சங்கம்: 49, 50ஆவது ஆண்டுப் பொது அறிக்கை (1990-1991).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: ஆட்சிக் குழு, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1991. (கொழும்பு-13: எம்.ஜி.எம். பிரிண்டிங் வேர்க்ஸ், 102/2, Wolfendhal