8118 மரியாளின் மகத்துவம்.

அற்புதம் இராசநாயகம். யாழ்ப்பாணம்: அமல மரித் தியாகிகள் சபை, தொடர்பகம், மருத்துவ நிலைய வீதி, 1வது பதிப்பு, மார்கழி 1990. (யாழ்ப்பாணம்: மணி ஓசை அச்சகம், 12, சென் பற்றிக்ஸ் வீதி).

(4), 98 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 18×12.5 சமீ.

அருள்நிறை அன்னை மரியாளின் மகத்துவத்தினை  விவிலிய ஆதாரங்களோடு தெளிவாக விளக்கும் நூல் இது. கன்னியும் கற்பரசியும், இறைவாக்குகளில் கன்னியும் மகனும், மணமகளாகத் தேர்ந்துகொள்ளப்பட்டவள், முட்களுள் லில்லிமலர், தரிசனை பெற்றவள், பேறு பெற்றவள், அன்னையும் அகதியானாள், நாசரேத்தூரின் நல்லதாய், மரியாள் ஊருக்கு உபகாரி, குறைவில் நிறைவுகண்டு களித்த கன்னி, துன்பத்தில் அன்னை, துன்பத்தின் பின் இன்பம், அன்னைக்கும் வரவேற்பு உண்டா, தேவாலயம், தேவமகனும் தேவதாயாரும் ஆகிய 15 தலைப்புகளில் திருமதி அற்புதம் இராசநாயகம் இந்நூலை எழுதியிருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  83965).

ஏனைய பதிவுகள்