ஆறு. திருமுருகன். யாழ்ப்பாணம்: இணுவில் சைவத் திருநெறிக் கழகம், இணுவில், 1வது பதிப்பு, ஜனவரி 2003. (யாழ்ப்பாணம்: கியோகாஸ் பிரின்டர்ஸ், இணுவில்).
xiv, 123 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகனின் இந்நூல் இணுவைச் சிவகாமி அம்பாள் கீர்த்தனைகளுடன், 21 சைவசமயம் சார்ந்து அவர் எழுதிய அறநெறிக் கட்டுரைகளையும் கொண்டுள்ளது. ஆடலும் அறிகையும் தமிழர் பண்பாடு, சிவநெறியும் அறநெறியும், சைவத்தின் அறத்துறைகள், ஆகம முறையில் திருக்கோயில், அறநெறி வாழ்வு, ஈழநாடும் விநாயகர் வழிபாடும், மெய்ப்பொருள் கண்டார் வழி, அறஞ்செய்ய விரும்பு, அபிவிருத்தியும் அறநெறியும், இணுவில் ஒரு பண்பாட்டு ஊற்று, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சித்தப்படி, அவனே நான், மாதா பிதா குரு தெய்வம், வருங்கால சமுதாயத்தை வெல்ல அறநெறிக் கல்வி, அறநெறிப் போதனையின் அவசியம், இந்து சமுதாய வாழ்வினை நெறிப்படுத்தலில் அறநெறிப்பாடசாலை பெறும் இடம், திருவாசகம் காட்டும் பக்தி நெறி, தெய்வ சாந்நித்தியம், இணுவில் சிவகாமி அறநெறிப் பாடசாலை, அறநெறிப் பாடசாலைகள், இந்துக் கோயில்களின் சமயப் பணிகள் ஆகிய 21 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 136706).