ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 2வது பதிப்பு, செப்டெம்பர் 2012, 1வது பதிப்பு, 11.9.2012. (சுன்னாகம்: கஜானந்த் பிரிண்டர்ஸ், மானிப்பாய் வீதி, இணுவில்).
(2), 36 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×14.5 சமீ.
எங்கும் பரந்திருக்கும் பரம்பொருட் சக்தியை கோவிலின் கும்பத்திலே எழுந்தருளச் செய்து பின் அதனை அபிஷேகம் செய்வதன்மூலம் திருவுருவத்திலே எழுந்தருளியிருந்து நிரந்தரமாக எமக்கு அருள்தரவேண்டுவதே கும்பாபிஷேகத்தின் நோக்கம் என்று கூறும் ஆசிரியர் இந்நூலில் அரிவியல்பூர்வமாக கும்பாபிஷேக தத்துவத்தை விளக்கியிருக்கின்றார். இந்நூலின் முதற் பதிப்பு யாழ்ப்பாணம், சிவலிங்கப் புளியடி அமரர், பிரம்மஸ்ரீ சண்முகராஜ சர்மா பாலச்சந்திர சர்மா (கணக்குப் பதிவாளர் இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டெட்) அவர்களின் நினைவு வெளியீடாக அவரது குடும்பத்தினரால் 11.9.2012 இல் வெளியிடப்பட்டது.