ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 2வது பதிப்பு, செப்டெம்பர் 2012, 1வது பதிப்பு, 2.9.2012. (சுன்னாகம்: ஸ்ரீ வித்யா கணினி அச்சகம், இணுவில்).
(2), 16 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 20.5×14.5 சமீ.
இந்துக்களைப் பொறுத்தவரையில் காத்தற் கடவுளாகிய விஷ்ணுவின் வாகனம் கருடன் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. வேதகாலம் முதல் இந்துக்களின் புனித நூல்களில் பல்வேறு இடங்களில் கருடனின் பெருமை பேசப்படுகின்றது. இந்நூல் உபாசனா தெய்வம், பெயர்ப்பொருள், தொன்மைப் பெருமை, தோற்றப் பொலிவு, முக்கிய சிறப்பியல்புகள், கருடனுக்குத் தனிச் சந்நிதிகள், சிறப்பான தினங்கள், சிறப்பான சில செய்திகள், கருடனின் சகுனம், கருட பகவான் வரலாறு ஆகிய தலை;பபுகளில் அமைந்த பல்வேறு தகவல்களின் தொகுப்பாக அமைந்துள்ளது.