மலர்க் குழு. திருக்கோணமலை: வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்கள வெளியீடு, 1வது பதிப்பு, 2009. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப், 361, நீதிமன்ற வீதி).
138 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
இந்நூலில் பெண்ணியம், பெண்ணின் மேன்மை, பெண்களால் செய்யப்படவேண்டியவை போன்ற கருப்பொருள்களில் எழுதப்பட்ட பத்துக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பண்பெனப்படுவது பாடறிந்தொழுகுதல், தேசவழமைச் சட்டத்தின் சமூகப் பரிணாமங்களும் யாழ்ப்பாணப் பெண்களின் சமூகப்பங்கும், ஆண்மையும் பெண்மையும், பெண்களின் உளநலம், சமுதாயமும் பெண்களும், பெண்ணியமும் தமிழ் மரபும், சமுதாய வனைதலில் பெண் வகிபாகம், பெண்களின் நிலை அன்றும் இன்றும், வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்குக் கைகொடுங்கள், தமிழர் சமூக வாழ்வியலில் பெண்களின் வகிபாகம் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நூலின் பிற்பகுதியில் ஈழத்துத் தமிழ்ப்பெண் ஆளுமைகளாக தங்கம்மா அப்பாகுட்டி, அருட்சகோதரி யூட் மடுத்தீன், பத்தினியம்மா திலகநாயகம் போல், அன்னலட்சுமி இராசதுரை, கோகிலா மகேந்திரன், மனோன்மணி சண்முகதாஸ், அம்மன்கிளி முருகதாஸ், தாமரைச்செல்வி, இமெல்டா சுகுமார், தவஈஸ்வரி துரைச்சாமி, வெனிற்றா றஞ்சனி அலோசியஸ் ஒஸ்வேல்ட், சாந்தினி சிவநேசன் ஆகியோர் பற்றிய வாழ்வும் பணியும் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47744).