8212 பெண்கள் உலகம்: அன்றும் இன்றும்.

ந.சி.கந்தையாபிள்ளை. சென்னை 01: முத்தமிழ் நிலையம், 75, வரதா முத்தியப்பன் தெரு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1947. (சென்னை: ரோயல் பிரின்டிங் வெர்க்ஸ், மவுண்ட் ரோடு).

(4), 64 பக்கம், விலை: 12 அணா, அளவு: 18×12 சமீ.

பெண்கள் பற்றிய விரிவான ஆய்வாக 24 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தோற்றுவாய், உலக நாகரிகத்தைத் தோற்றுவிப்பதில் பெண்களும் சமபங்கினர், ஆடவர் -மகளிர் ஒழுக்கங்கள், திருமணம், ஆண்-பெண் சேர்க்கை ஒழுக்கங்கள், பழைய நாகரிக காலத்தில் பெண்கள் நிலை, கிரேக்கர் உரோமர் காலங்களில் பெண்கள் நிலைமை, கிறிஸ்துவுக்குப் பின் பெண்கள் நிலை, மத்திய காலத்தில் பெண்கள் நிலை, ஐரோப்பாவில் பெண்கள் முக்காடு இட்டு மறைவாக வாழ்தல், பெண்கள் சிறிது சிறிதாக விடுதலை அடைதல், இரசியாவில் பெரிய பீற்றரின் சட்டம் 1704, லெனினின் சட்டம் 1917, இரசிய நாட்டில் உண்டான மாற்றங்கள், கருவைச் சிதைத்தல், வேலையாட்கள் இருபாலாருக்கும் ஒரேயளவு கூலி, கலியாணமாகாத தாய்மார், விலைமாதர் தோன்றுவதற்குக் காரணம் வறுமை, விடுதலை அளவுகடந்தாலும் அபாயம், இந்திய நாட்டில் விலைமாதர், நிர்வாண இயக்கம், பெண்கள் தொடர்பான சில குறிப்புகள், பெண்களை உடன்கட்டை ஏற்றும் பரிதாபம், ஒருவன் ஒரு பெண்ணை மணத்தல் ஆகிய 24 தலைப்புகளின்கீழ்  உலகில் பெண்களின் நிலை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1856).

ஏனைய பதிவுகள்