எஸ்.எம்.ஆலிப். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 156 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-299-3.
சமகால சர்வதேச உறவுகளில் பயங்கரவாதம் முக்கியமானதொரு பிரச்சினையாக உருவெடுத்து வந்துள்ளது. இந்நூல் பயங்கரவாதத்தினை கோட்பாட்டு ரீதியாக அறிமுகப்படுத்துகின்றது. பயங்கரவாதத்தினை வரைவிலக்கணப்படுத்துவதுடன் அதன் அடிப்படை அம்சங்களையும் அது தூண்டப்படுவதற்கான காரணங்களையும், அதன் வகைகளையும், அதன் பரவலையும், அதன் வடிவங்களையும் விபரிக்கின்றது. 12 இயல்கள் கொண்ட இந்நூல் பயங்கரவாதம் என்ற பதத்தின் தோற்றம், வளர்ச்சி, மற்றும் வரையறைகள், பயங்கரவாதத்தின் அடிப்படை அம்சங்கள், பயங்கரவாதம் தோன்றுவதற்கான காரணங்கள், பயங்கரவாதத்தினை கோட்பாடாக்கல், பயங்கரவாதத்தின் வகைகள், சமகால உலகில் பயங்கரவாதத்தின் பரவல், பயங்கரவாதத்தின் எதிர்கால வடிவங்கள், அல்-பயங்கரவாதமும் எதிர்ப் பயங்கரவாதமும், பயங்கரவாதத்திற்கு எதிரான பல்தரப்பு பதிலீடுகள், பயங்கரவாதத்திற்கான இன மற்றும் தேசிய அடிப்படைகள், பயங்கரவாதத்திற்கான சமயரீதியான நியாயப்படுத்தல்கள், தென்னாசியாவில் பயங்கரவாதம் ஆகிய தலைப்புகளின்கீழ் ஆராயப்பட்டுள்ளது. சீனி முஹம்மது ஆலிப் தனது ஆரம்பக்கல்வியை அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் கற்றதுடன் தனது இளமாணிப் பட்டத்தினையும், முதுமாணிப் பட்டத்தினையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டவர். தற்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசாரப்பீடத்தின் பீடாதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.