கோபாலபிள்ளை அமிர்தலிங்கம். கொழும்பு 13: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
x, 206 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-9396-20-8.
இந்நூல், 12 அத்தியாயங்களில் சுதந்திரத்தக்குப் பின்னதான இலங்கைப் பொருளாதாரத்தின் செயலாற்றத்தினை விரிவாக ஆராய்கின்றது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் பொருளியல் சஞ்சிகைகளில் இலங்கை தொடர்பாக வெளியான கட்டுரைகளும் இந்நூலில் தரப்பட்டுள்ளது. 1948-2007 இடையிலான மிக நீண்டகாலப் பகுதிக்கான தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கைப் பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளான பொருளாதாரக் கொள்கைகள், விவசாயத்துறை, கைத்தொழிற்துறை, பணவீக்கம், வேலையின்மை, பொதுப்படுகடன், மற்றும் வறுமை போன்ற அகன்ற பரப்பில் அடங்கும் விடயங்களை ஆழமாகவும் தெளிவாகவும் விளக்குகின்றது. அத்துடன் இன்றைய யுத்தம் இலங்கைப் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்திவரும் தாக்கங்கள் பற்றியும் இந்நூலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நூலை எழுதியவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரான கோ.அமிர்தலிங்கம் அவர்களாவார்.