வி.நித்தியானந்தம். கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).
xxxii, 647 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 700., அளவு: 25×19 சமீ., ISBN: 978-955-659-134-6.
பொருளியலில் ஒரு பகுதியாகிய Macroeconomics எனப்படும் பருநிலைப் பொருளியல் பற்றி இந்நூல் விரிவாகப் பேசுகின்றது. அறிமுகம், கேள்வியும் நிரம்பலும் 1: சந்தைகளின் தொழிற்பாடு, கேள்வியும் நிரம்பலும் 2: சந்தைகளும் பொருளாதார நலனும், பருநிலைப் பொருளியலின் முக்கிய அளவீடுகள், நீண்டகாலத்தில் மெய்நிலையிலான பொருளாதாரம், நீண்ட காலத்தில் பணமும் விலைகளும், திறந்த பொருளாதாரங்களின் பருநிலைப் பொருளியல், குறுகிய காலப் பொருளாதாரத் தளம்பல்கள் ஆகிய எட்டுப் பகுதிகளில் உள்ளடங்கும் மொத்தம் 22 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பருநிலைப் பொருளியலின் அடிப்படையான தத்துவங்களை உரியவாறு விளக்குவதுடன் விளக்கங்களுக்கு ஆதாரமான வரைபடங்களையும் இந்நூல் கொண்டுள்ளது. நூலின் முடிவிலுள்ள அருஞ்சொல் விளக்கக் கோவை முக்கியமான துறைசார் சொற்களையும் சொற்றொடர்களையும் தேர்ந்தெடுத்து அவற்றை வரையறை செய்வதுடன் அவற்றிற்குச் சமமான ஆங்கில மொழிபெயர்ப்பையும் தருகின்றது. தேவையான ஒரு விடயத்தை இலகுவில் கண்டறிந்து கொள்ளக்கூடிய விரிவானதொரு சுட்டியும் நூலினை அணிசெய்கின்றது. வி.நித்தியானந்தம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொருளியற் பேராசிரியராகப் பணியாற்றியவர்.