வே.கருணாகரன். யாழ்ப்பாணம்: வேலாயுதம் கருணாகரன், 215 கே, நாவலர் வீதி, 3வது பதிப்பு, ஜனவரி 2001, 1வது பதிப்பு, ஜனவரி 1999, 2வது பதிப்பு, ஜனவரி 2000. (யாழ்ப்பாணம்: கங்கை ஓப்செட் பிரிண்டர்ஸ், நாவலர் வீதி, பிரவுண் வீதிக்கு அருகாமை).
60 பக்கம், அட்டவணைகள்;, வரைபடங்கள், விலை: ரூபா 60., அளவு: 20×14 சமீ.
உயர்தர பாடநெறியில் சர்வதேச வர்த்தகம் பற்றிய கோட்பாட்டுரீதியான விளக்கம் இந்நூலின் மையக்கருவாக இருப்பதோடு அதன் நடைமுறை அனுபவங்கள், அட்டவணைகள், வரைபடங்கள் என்பவற்றின் உதவியுடன் விளக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி இறக்குமதி கட்டமைப்புகள், அதில் ஏற்படும் மாற்றம் போன்றவை இலங்கையை மையமாகக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தகத்தின் வரைவிலக்கணம், சர்வதேச வர்த்தகம் தோன்றுவதற்கான காரணங்கள், அடிப்படைக் கோட்பாடுகள், அனுகூலங்கள், பிரதிகூலங்கள், வர்த்தகப் பாதுகாப்பு, இறக்குமதி தாராளமயமாகுதல், இலங்கையின் இறக்குமதி – ஏற்றுமதிக் கட்டமைப்புக்கள், (1991-1997 காலகட்டத்தில்) இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகத்தின் முக்கிய பண்புகள் ஆகிய விடயங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளதுடன், கடந்த காலப் பரீட்சை வினாக்கள், பயிற்சி வினாக்கள், அவற்றுக்கான விடைகள் எனபனவும் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளன.