டனி அத்தபத்து (சிங்கள மூலம்), எம்.கணேசமூர்த்தி, சி.மென்டிஸ் அப்பு (தமிழாக்கம்), அ.சிவநேசராஜா (தொகுப்பாசிரியர்). மகரகம: கலாநிதி அ.சிவநேசராஜா, பிரதான செயற்றிட்ட அதிகாரி, வணிகக் கற்கைத்துறை, தேசிய கல்வி நிறுவனம், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை, ஆட்டுப்பட்டித் தெரு).
xi, 211 பக்கம், விலை: ரூபா 425., அளவு: 25×18.5 சமீ.
பேராசிரியர் டனி அத்தபத்து இலங்கையின் தலைசிறந்த பொருளியல் அறிஞர். சிங்கள மொழியில் இவர் எழுதிய பொருளியல் நூலின் தமிழாக்கம் இதுவாகும். இந்நூலில் உயர்தர பாடத்திட்டத்திற்குரிய நுண்பாக பொருளியல் கோட்பாடுகளும், பேரினப் பொருளாதாரக் கோட்பாடுகளும்; இரு துறை விடயமாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. கோட்பாட்டு விடயமானாலும் அவை மிகவும் எளிமையான மொழியிலும் மேலும் எளிமைப்படுத்தியும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.