8243 பொருளியல்: வர்த்தக மாற்று வீதம் அலகு 6.2.

வே.கருணாகரன்.  யாழ்ப்பாணம்: வேலாயுதம் கருணாகரன், 215 கே, நாவலர் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1999. (யாழ்ப்பாணம்: கங்கை ஓப்செட் பிரிண்டர்ஸ், நாவலர் வீதி, பிரவுண் வீதிக்கு அருகாமை).

35 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 20×14 சமீ.

தேறிய பண்ட வர்த்தக மாற்றுவிகிதம்  என்ற முதற்பிரிவில் வரைவிலக்கணம், கணிப்பிடும் முறை, முக்கியத்துவம், நிர்ணயிக்கும் காரணிகள், சாதக-பாதகமாக  மாறக்கூடிய நிலைமைகள், பொருளாதார விளைவுகள், அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள், மெய்த் தேசிய வருமானமும் வர்த்தக மாற்று விகிதமும், இலங்கையின் வர்த்தக மாற்று விகிதம், குறைபாடுகள் ஆகிய விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன.  வருமான வர்த்தக மாற்று விகிதம் என்ற இரண்டாவது பிரிவில் வரைவிலக்கணம், கணிப்பிடும் முறை, முக்கியத்துவம், நிர்ணயிக்கும் காரணிகள், சாதக-பாதகமாக  மாறக்கூடிய நிலைமைகள், பொருளாதார விளைவுகள்,குறைபாடுகள் என்பனவும் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலின் இறுதியில் கடந்தகாலப் பரீட்சை வினாக்கள், பயிற்சி வினாக்கள், விடைகள் என்பன காணப்படுகின்றன.

ஏனைய பதிவுகள்