பி.உமாசங்கர். கொழும்பு 9: இஸ்லாமிய புத்தக இல்லம், இல.77, தெமட்டகொட வீதி, 1வது பதிப்பு, 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).
iii, 584 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14 சமீ.
இந்நூல் பொதுவிவேகம், பொது அறிவு, கட்டுரையும் சுருக்கமும், முகாமைத்துவ உளச்சார்பு ஆகிய நான்கு முக்கிய விடயங்களை உள்ளடக்கியது. பத்து கடந்தகால வினாத்தாள்கள்-விடையுடன் கூடியதாக பொதுவிவேகம் என்ற பிரிவின்கீழ் தரப்பட்டுள்ளன. கடந்தகால வினா-விடைகளுடன் கூடிய பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய பொது அறிவுப் பகுதி முக்கியமானதாகும். விளக்கக் குறிப்புகளுடன் கூடியதாக, அண்மைக்கால விடயங்களைத் தழுவிய பதினைந்து கட்டுரைகள் மூன்றாவதாக அமைகின்றன. முகாமைத்துவ உளச்சார்பு என்ற பகுதியில் விளக்கக் குறிப்புகளுடனான கடந்தகால வினா-விடைகள் தரப்பட்டுள்ளன.