8256 திட்டமிடல் மூலதத்துவங்கள்.

அமரசிங்கம் கேதீஸ்வரன். கிளிநொச்சி: அ.கேதீஸ்வரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட கலாசாரப் பேரவை, மாவட்டச் செயலகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xx, 102 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×15 சமீ.

நூலாசிரியர்- பொருளாதாரத்தைச் சிறப்புக்கலைமாணித் தேர்விலும், முது தத்துவமாணித் தேர்விலும் கற்றுப் பட்டம் பெற்றவர். இலங்கை அரசின் திட்டமிடல் சேவையின் உயர் அதிகாரியாகப் பணியாற்றுபவர். திட்டமிடலை அறிமுகம் செய்து அதன் படிமுறைகளை விரிவாகக் குறிப்பிடும் இந்நூல் வளர்முக நாடுகளை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளது. கருத்திட்டச் சக்கரம், கருத்திட்டத்தினை உருவாக்குதல், தயாரித்தல் மற்றும் சாத்திய வளப் பகுப்பாய்வு என்பவை எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. 16 இயல்களில் எழுதப்பட்ட இந்நூல் திட்டமிடலுக்கோர் அறிமுகம், கருத்திட்டங்களைத் திட்டமிடுதல், கருத்திட்டச் சக்கரம், கருத்திட்டங்களை உருவாக்குதல் தயாரித்தல் மற்றும் சாத்தியவளப் பகுப்பாய்வு, திட்ட வடிவமைப்பு, கருத்திட்ட மதிப்பீடு, கருத்திட்டத் தெரிவும் உடன்பாடும் அங்கீகாரமும், கருத்திட்டத்தினை ஒழுங்கமைத்தலும் துரிதப்படுத்தலும், கருத்திட்ட அமுலாக்கமும் நெறிப்படுத்தலும், கருத்திட்ட மேற்பார்வையும் கண்காணிப்பும் கட்டுப்பாடும், கருத்திட்டப் பூர்த்தி அல்லது முடிவுறுத்தல், திட்ட வெளியீட்டு வியாபிப்பும் சாதாரண நிர்வாகத்துக்கு பரிமாற்றம் செய்தலும் ஆகிய தலைப்புக்களில் விளக்கமளிக்கின்றது.         

ஏனைய பதிவுகள்