8260 வாழ்வா அணுக்குண்டால் அழிவா?

வல்வையூர் சி.பொன்னையா. வல்வெட்டித்துறை: சி.பொன்னையா, சட்டத்தரணி, 1வது பதிப்பு, கார்த்திகை 1983. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்).

(5), 20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

உலக நாடுகளின் ஆதிக்கப்போட்டியால் அணு ஆயதப்போர் நிகழும் ஆபத்தை எதிர்வுகூறும் இந்நூல், ஒரு அறிவியல் கட்டுரையை சுவாரஸ்யம் கருதி, கற்பனையும் கலந்து படைக்கப்பட்டுள்ளது. வன்செயலை வன்செயலால் அழிக்கமுடியாது என்ற மகாத்மா காந்தியை ஐன்ஸ்டைன்  சக விஞ்ஞானி றசல் என்பவருடன் அணுகுவதாகவும், அவருடன் ஜவகர்லால் நேருவும் உடனிருப்பதாகவும் உருவகப்படுத்தப்படுகின்றது. மகாத்மாவின் ஆன்மீக போதனை, யோகியாகிய உபாசகர் ஒருவர் மூலம் முருகனை வேண்டுதலாக அமைகின்றது. முருகனும் தன் பங்கிற்கு போர்முறையை வலியுறுத்துகின்றார். இறுதியில் அணு சக்திகளின் தீய அழிவினை முறியடிக்க மக்கள் சக்தியே சிறந்தது என்றும் அவ்வந்நாடுகளின் தலைவர்களை மக்கள் சக்தியின் மூலம் சிந்திக்கச் செய்யவேண்டும் என்றும் ஆசிரியர் தனது வாதத்தை நிறைவுசெய்கிறார்.

ஏனைய பதிவுகள்