மா.செ.மூக்கையா. பேராதனை: மா.செ.மூக்கையா, புவியியல்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1995. (யாழ்ப்பாணம்: காந்தளகம்).
xvi, 200 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
இந்நூல் குறைவிருத்தியும் அதன் பிரதான பண்புகளும், அபிவிருத்தியின் பரிமாணங்கள், அபிவிருத்திக்கான உபாயங்கள், அபிவிருத்திக்கான ஏனைய காரணிகள், இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியும் இன்றைய நிலையும் ஆகிய ஐந்து அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றியவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்புக் கலைமானிப்பட்டம் பெற்று, பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதார புவியியலில் முதுகலைமானிப் பட்டத்தைப் பெற்றார். அதன் பின்னர் பொதுநலவாய புலமைப்பரிசில் பெற்று பிரித்தானியாவின் முது அறிவியல்மானிப் பட்டத்தினையும் பெற்றதோடு பட்டயம்பெற்ற நகர திட்டமிடலாளராகவும் அங்கீகரிக்கப்பட்டார். பிரதேச திட்டமிடலும் அபிவிருத்தியும், பொருளாதாரப் புவியியல் ஆகியவற்றில் இவர் தீவிர ஈடுபாடுடையவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23639).