8266 உட்படுத்தற் கல்வி.

பாலசுப்பிமணியம் தனபாலன். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, மே 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ்;, 424, காங்கேசன்துறை வீதி).

vi, 144 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.

சமகாலக் கல்விச் செல்நெறியில் மிக முக்கிய பிரயோகமாக உட்படுத்தற் கல்விப் பிரயோகங்கள் முதன்மை வகிக்கின்றன. யுனெஸ்கோவின் கொள்கைப் பிரகடனமாகவும் இவ்வெண்ணக்கரு திகழ்கின்றது. Inclusive Education என்னும் உட்படுத்தற் கல்வி தொடர்பான இந்நூலில் எல்லோருக்குமான கல்வியின் இலட்சியம் உட்படுத்தற் கல்வி, உட்படுத்தற் கல்விக்கான பிரவேசமும் கற்றல் இடர்ப்பாடுடைய பிள்ளைகளின் குணநலன்களும் காரணங்களும், உட்படுத்தல் கல்வியில் பிள்ளை நேயப்பாடசாலைகள் பற்றிய சமூக எதிர்பார்க்கை, உட்படுத்தல் கல்வியை அமுலாக்க உதவும் கட்டாயக் கல்விக்குழுச் செயற்பாடுகள், உட்படுத்தற் கல்வியை வலுவூட்டும் சமூக இயைபுக்கும் சமாதானத்துக்குமான கல்வி தொடர்பாகத் தேசியக் கொள்கையின் அவசியம், கலாசாரங்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்காக இரண்டாம் தேசிய மொழிக் கற்றல், பின்னிணைப்புகள் ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

17599 மௌன நிழல்கள் (Silenced Shadows).

சர்வதேச மன்னிப்புச் சபை. London WC1X 0DW: Amnesty International, Peter Benenson House, 1, Easton Street, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 10: Fast Printery Pvt Limited,165, தேவநம்பியதிஸ்ஸ மாவத்தை).

15724 நினைவுகள் சுமந்து.

எம்.சிவசோதி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 64 பக்கம், விலை: ரூபா